Tuesday, November 19, 2013

உத்தவ கீதை - 3

உத்தவ கீதை - 3


விட்டில் பூச்சி,
விளக்கின் ஒளி விரைந்தழைக்க அதனோடு விளையாடித் தன்
வாழ்வை இழக்கும்; அதுபோல் மக்கள் பிறபொருட்கள் மேல் 
பற்று கொண்டால் அழிவர் என்பது விட்டில் பூச்சி எனக்கு
வழங்கியப் பாடம்;

தேனீ, மலர் தோறும் பறந்து தேன் சேகரிக்க ஒருநாள் வேடன் அத்
தேனை அபகரித்துக்கொள்கிறான்; தேனைச் சேகரித்தத் தேனீ 
தேனைப் பருகாமலேயே அதை இழப்பது போல்,தேவைக்கதிகமாய் 
தேடிப் பொருளீட்டி வைத்தால் இழக்க நேரிடுமேன்பதைத்
தேனீ எனக்குச் சொல்லித் தந்தது;

யானை
வலிமையுடன் வனத்தில் இருந்தாலும்,
ஆண் ஆனைக்கு பெண் ஆனை மேல் ஆலாதிப் பிரியம்.
ஆனையைப் பிடிக்க எண்ணுவோர் ஆண் ஆனை வரும் பாதையில் பெண்
ஆனையை நிற்கவைத்து இடையில் அகண்ட பள்ளம் தோண்டி யானையை
அகப்பட வைப்பார்; 
அதுபோல் பெண் பின் சுற்றுபவர் துயரில் அகப்பட்டு வருந்த நேரிடுமென்ற பாடம்
ஆனை எனக்கு அறிவுறுத்தியது;

வேடன்
தேனடைகளை வேட்டையாடி வருமானமீட்டி வாழ்வான்;
தேவைகதிகமாய்த் தேடி வைத்த பொருளைத் தேனீ வேடனிடம் இழப்பதுபோல்,
தான் அனுபவிக்காது உலோபி ஈட்டி வைக்கும் பொருளை யாரோ எடுத்துக்கொள்வர்;
வேடனிடம் சீடனாய் இருந்து கற்றப் பாடம்;

மான்.
இனிய இசை ஒலிக்கும் திக்கு நோக்கித் தன் இரு காதுகளையும் நீட்டி மெய் மறந்து நிற்கும் மான்இதுவே தக்க தருணமென்று இமை மூடும் நேரத்தில் வலை வீசிப் பிடிப்பர் ஆண்.இறைவனின் சிந்தை இல்லா வேறெதிலும் எண்ணம் செலுத்தினால் இதுபோல் அவதி நேருமென்று  சொல்லித் தந்தது மான்;கற்றுக் கொண்டது நான்;


அவதூதர் அரசன் யதுவிற்கு 
அறிவித்ததை துவாரகையின் அரசன் கண்ணன் தன்
அன்பிற்குப் பாத்திரமான உத்தவருக்கு அறிவுருத்தினான்;

மீன்,
தூண்டில் புழுவை உண்ண விரும்பி வாய் திறக்கும்;
தூண்டிலில் சிக்கி இறக்கும்;
வாயினைக் கட்டுப்படுத்தாது போனால் வருந்திச் சாக நேரிடும் என்றெனக்குச் சொல்லித் தந்தது மீன்;

பிங்களா 
எனும் விலை மாது,பெரிய விலை கேட்பாள்; 
தன் உடல் விருந்து வைப்பாள்; 
நாள்பட நாள்பட அவள் கெட்ட பணம் தர ஆருக்கும் மனமில்லை;
அங்ஙனம் மனமிருப்போரிடம் பணமில்லை;
உறங்காது உடல் விற்று உயிர் வாழ்வதைத் துறந்து,மகாவிஷ்ணுவை மனதில் நினைத்து
அவர் பக்தையாகிப் போனாள்;
கெட்ட வழி துறந்து நல்ல வழியில் செல்வதே நல்லது என்பது பிங்களா எனக்குச் சொல்லித் தந்தப் பாடம்;

'குரரம்' எனும் குருவி
மாமிசம் ஒன்றைக் கண்டு கவ்விப் பறந்தது;
மாமிசத்தின் மீது மையல் கொண்ட பருந்துகள்குருவியைத் துரத்தின;
ஆசைபட்டப் பொருளை அப்படியே தூர வீசிவிட்டு அங்கிருந்து பறந்தது குருவி;
அதனாலே உயிர் தப்பியது;
ஆசை கொண்டு ஒரு பொருளை அணைத்துக் கிடந்தாள் அதனால் இன்பம் கிட்டாது,
துன்பமே கிட்டும் என்று 'குரரம்' என்ற அந்தக் குருவி குருவாய் இருந்து எனக்குச் சொல்லித் தந்தது;

சிறுவன்,
சிறுக் கவலை கூட இல்லாது, ஆடிப் பாடி ஓடி விளையாடுகிறான்;
பொறாமை, வெறுப்பு, சூழ்ச்சி போன்ற எந்தத் தீயக் குணமும் மனதில் கொள்ளான்;
எப்பொழுதும் நல்லவனாய் மகிழ்ச்சியாய் இருக்கிறான்; அதுபோல்
இருப்பார்க்கு அனவிரதமும் இன்பம் கிட்டும் என்பதைச் சிறுவனிடம் நான் கற்றப் பாடம்;

 பெண் 
தன்னை மணம் பேச வந்தவர்க்கு உணவு சமைக்க நெல் குத்தினாள் பெண் ஒருத்தி;
கையில் இருந்த வளையல்கலெல்லாம் கலகல என ஒலியெழுப்ப,ஒன்று ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்றெல்லாவற்றையும் கழற்றிவைத்து விட்டாள்;
இதிலிருந்து, ஒன்றாய் எல்லாரும் உரைக்க சண்டை மூளும்;
ஒன்று மட்டும் தனித்திருந்தால் அமைதி தரும் என்று கன்னி எனக்குக் கற்பித்தாள் பாடம்;

கொல்லன்,
தன் பட்டறையில் தன் வேலையில்,கண்ணும் கருத்துமாக,வேறு சிந்தனை ஏதுமின்றி,
எப்படி உழைக்கிறானோ அப்படி இறைவன் மேல் எப்பொழுதும் 
கவனம் கொண்டு செயல்பட்டால் கவலை இல்லாது கரையேறலாம் என்று
கொல்லன் எனக்குக் கற்பித்தான்;

பாம்பு,
தனியாய் வசிக்கும்;
ஆள் ஆரவாரம் கேட்டால் அக்கணமே அங்கிருந்து ஓடிவிடும்;
அதுபோல் தனியே அதிகம் பேசாதுஅடக்கமாக வாழ்.
பாம்பு சொல்லித் தந்தப் பாடம் இது;

பட்டுப் பூச்சி
பட்டு நூல்களை உற்பத்தி செய்து வலை பின்னுகிறது, பின்னொரு நாளில் பின்னிய வலையைத் தானே தின்னுகிறது; 
படைக்கும் பொருள் அனைத்தையும் பிரளயக் காலத்தில் பரம்பொருளே அழிக்கிறார்;
பட்டுப் பூச்சி கற்றுத் தந்தப் பாடமிது;

குளவி
தன் கூட்டில்  புழுவை அடைத்து அதைச் சுற்றி ஒலி எழுப்பும்;
குளவியின் ஒலி கேட்டு வளரும் புழு குளவியாகவே உருவெடுக்கும்;
அதுபோல் ஆண்டவனை எண்ணியே அனுதினமும் இருப்போர் ஆண்டவனாகவே வாழ்வர் என்பது குளவி எனக்குக் குருவாய் இருந்துக் 
கற்பித்தப் பாடம்;

இவ்வாறு இந்த 
இருபத்தி நான்கு குருக்களிடமிருந்து 
இருக்கையில் எப்படி இருப்பது என்று கற்றுக்கொண்டேன் என
இனிய அவதூதர் சொல்லி முடித்தார்;
இன்னொன்றையும் தொடர்ந்து சொன்னார்;
இந்தச் சரீரம் நமக்கு இன்ப துன்பத்தை அளிக்கிறது;
இறப்பு பிறப்பு இதில் பிணைந்து இருக்கிறது;
இதனால் விவேகம், வைராக்கியம் கிடைப்பதனாலே 
இவ் உடலும் எனக்கு ஒரு குரு ஆனது;

துவாரகை மன்னன் ஸ்ரீ கிருஷ்ணன் தன் நண்பன் உத்தவனுக்கு 
உரைத்த இந்த அறிவுரைகளே உத்தவ கீதை எனப்படும்;

                                                                        ( கீதை முடிந்தது )


                                                                 


Thanks & Regards

Harimanikandan .V
ஹரிமணிகண்டன்
                 
ஓம் சிவசிவ ஓம்
Dr.Mystic Selvam Om Shiva Shiva Om Mp3                  
Be Good & Do Good

உத்தவ கீதை - 2

உத்தவ கீதை - 2


'உத்தவரே, உறவு மக்கள் என எதன்மீதும் பாசம் கொள்ளாது, என்னையே எந்நேரமும் தியானத்தில் கொள்ளவும்; என்னைத் தவிர எல்லாம் மாயை  என்பதை உணரவும்;

மனதை அடக்கு, இந்த உலகமே நான், இதை அறி; தொல்லை இல்லை உமக்கு';


'பரந்தாமா, எல்லாவற்றையும் படைத்தவனே நீ தான்; எதன்மீதும்  பற்று கொள்ளாது துறந்திருக்கப் பறைபவனும் நீ தான்; அப்படிப் பற்று கொள்ளாதிருப்பது எப்படி என்று உபதேசிக்க வேண்டும்,எந்த தோசமும் இல்லாதவரே,காலத்தால் அளவிடமுடியாதவரே,
எல்லாம் அறிந்தவரே,என்றும் அழியாது நிலைத்திருக்கும் வைகுண்டத்தில் வசிப்பவரே, நர
நாராயணராக அவதரித்தவரே,உம்மைச் சரணடைந்தேன்;எம்மைக் கரையேற்றும்;'



உலகளந்தவன் உத்தவருக்கு விளக்கினான் யது என்ற அரசனுக்கும், அவதூதர் என்பவருக்கும் 
இடையே நடந்த வரலாற்றை;



அந்த வரலாறு ...


ஒருமுறை அரசன் யது ஆத்மா ஞானம் வேண்டி அவதூதரை  அணுகினான்;'அவதூதரே, எல்லாம் அறிந்தும் ஏதும் தெரியாச் சிறுவன் போல் இருக்கிறீரே, அழகிய சரீரம் கொண்டவர்,
அழகாகப் பேசுகிறவர், இருந்தும் எதன் மீது பற்றிலாது  இருக்கிறீரே,அறிவிருந்தும் பைத்தியம் போல் திறிகிரீரே;

காமம் பேராசை போன்றவைகளால் மக்கள் துன்புற, நீர் மட்டும் கங்கையில் குளிக்கும் யானை போல் சஞ்சலமன்றி  இருக்கிறீரே,இத்தனை ஞானம் கிடைத்தததெப்படி உமக்கு, அதை
இயம்ப வேண்டும் எமக்கு;'



அவதூதர் அவருக்கு அறிவுறுத்தியது ...

'அரசே, அநேக பேர்கள் எனக்குக 24 குருவாகி ஆத்மா ஞானம் கற்பித்தார்கள்; 
அவர்களிடம் கற்ற ஞானத்தை அரசர் தங்களுக்கு அடியேன் கற்பிக்கிறேன்;


அவர்கள் முறையே:
  1. பூமி
  2. காற்று
  3. ஆகாயம்
  4. நீர்
  5. அக்கினி (நெருப்பு)
  6. சந்திரன்
  7. சூரியன்
  8. மாடப்புறா
  9.  மலைப்பாம்பு,
  10. சமுத்திரம்,
  11. விட்டில் பூச்சி,
  12. தேனீ,
  13. யானை,
  14. தேனெடுப்பவன்,
  15. மான்
  16. மீன்,
  17. பிங்களையெனும் வேசி,
  18. புறா
  19. குழந்தை
  20. குமரி, 
  21. அம்பு தொடுப்பவன், 
  22. பாம்பு,
  23.  சிலந்திப்பூச்சி
  24. குளவி.

மனிதம் மிருகம் எல்லோராலும் மிதிபடுகிறது;
தோண்டத் தோண்டத் துன்பம்சகித்துக் கொள்கிறது;
மற்றவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் தருகிறது இந்த
மண் என்ற பூமி

இதுவே எனது முதல் குரு; மக்கள் வருத்தியதை மண்மாதா மறக்கிறாள்;
மாறாக நெல் கனி பல தருகிறாள்; துன்பம் தருவோருக்கு
இன்பம் தரவேண்டுமென்பது இப்பூமியிடமிருந்து நான் கற்ற பாடம்;
உபத்திரவம் செய்வோர்க்கும் உபயோகமாய் இருப்பதே இதன்
உள்ளர்த்தம்;

வாயு, உடலென்ற நாம் வாழ உறுதுணையாயிருக்கிறது; 
உடல் இன்ப துன்பத்தில் சிக்குண்டாலும், பணம் பொருள் மேல்
பற்றுகொண்டாலும் வாயு என்ற ஆத்மா இதிலெல்லாம் அகப்படாமல் 
தனித்திருக்கிறது;  அதுபோல் ஞானம் வேண்டுபவன் தேவையில்லாத பொருட்கள் மேல் 
சிந்தை கொள்ளது தனித்திருக்கவேண்டுமேன்பது வாயு எனக்கு வழங்கியப் பாடம்.

ஆகாயம் எங்கும் நிறைந்துள்ளது;அளவிட முடியாதது;
எதனோடும் எள்ளளவும் தொடர்பு இல்லாதது;
அதுபோல் ஆன்மாவும் தனித்து ஒரே நிலையில் இருக்கவேண்டுமேன்மது 
ஆகாயம் எனக்கு அறிவித்த பாடம்.

தண்ணீர் 
தனக்கென்று ஓர் நிறமற்றது;தன்னை நாடி வந்தோர்க்கு 
தன்னலம் பாராது நலம் செய்வது போல்,ஆத்மா ஞானியர் 
அண்டுவோர் பாவங்களைப் போக்க வல்லவர்;
இதனை எனக்கு உணர்த்திய தண்ணீரும் எனக்கு ஒரு குரு;

அக்னி, தன்னை அண்டியோரையெல்லாம் எரித்துச் சாம்பலாக்கும்;
அதனதன் வடிவேடுத்தே அக்னி அவைகளைக் கரிக்கும்;
அதுபோல் ஆன்மாவும் ஆக்கையின் வடிவமே கொள்கிறது;
அவரவர் எண்ணம் போல் வளர்ந்து  அந்தியில் அழிக்கிறது;
அக்னி எனக்கு அளித்த பாடமிது;

சந்திரன் 
சில காலம் வளர்கிறது,சில காலம் தேய்கிறது,இது நிலவு காரணமில்லாமல் நிகழும் மாற்றம்;
சூரியஒளி படும்அளவே கொண்டே அந்த நிலவின் தோற்றம்;
அதுபோல் ஒளிர்வது, மறைவதெல்லாம் ஆக்கையின் குணங்களே அன்றி ஆன்மாவிற்கும் அதற்கும் சம்பந்தமில்லை இது நிலவு எனக்குசொல்லித் தந்தப் பாடம்;

சூரியன் 
நீரைச் சுட்டு மேகமாய் மாற்றுகிறது;
பின் அதைக் குளிர்வித்து மழையாய்ப் பெய்கிறது;
அதுபோல் ஞானியர் கல்வி கற்று, ஞானம் பெற்று மற்றவர்க்கு மழை போல் வழங்க வேண்டும்;
சூரியன் எனக்குச்சொல்லித் தந்தது;

பந்த பாசத்தில் ஒட்டாது பழகி விலக வேண்டுமென்பது,
பந்த பாசத்தால் ஒட்டி உறவாடி உயிரிழந்த புறா ஒன்று எனக்கு
உணர்த்தியப் பாடம்;

உணவு தேடித் தான் செல்லாது, கிட்டிய உணவை உண்டு வாழும் 
மலைப் பாம்பு; உணவு கிட்டாது போனால் உண்ணாது வாழும்;
அதுபோல் கிடைத்ததைக் கொண்டு, கிட்டாதது பின் செல்லாதிருக்கும் ஞானம்
மலைப் பாம்பு சொல்லித் தந்தது;

கடல்,
பரந்து விரிந்து உள்ளது; 
மழைக் காலத்தில் ஆறுகள் கலப்பதினால் அளவு நீள்வதில்லை;
வெயில்காலத்தில் ஆறுகள் காய்வதினால் அளவு குறைவதில்லை;
அதுபோல் ஞானியர் இன்பம் வருகையில் துள்ளாது,
துன்பம் வருகையில் துயலாது, இருக்கவேண்டுமென்பது
கடல் தந்த பாடம்.

இன்னும் சொன்னது ... http://uddhavagitatamil.blogspot.in/2013/11/3.html





                                                                        ( உத்தவகீதை தொடரும் )

Thanks & Regards

Harimanikandan .V
ஹரிமணிகண்டன்

                 
ஓம் சிவசிவ ஓம்
Dr.Mystic Selvam Om Shiva Shiva Om Mp3                  
Be Good & Do Good

உத்தவ கீதை - 1

உத்தவ கீதை - 1



பரந்தாமன் ஸ்ரீ கிருஷ்ணன் பூலோகத்தில் தன் பணியெல்லாம் முடிந்த  பின் வைகுந்தம் திரும்புமுன் மந்திரி  உத்தவருக்கு உபதேசித்ததே இந்த உத்தவ கீதை;


பிரம்மனும் மற்ற தேவர்களும் பரந்தாமனைப் பார்க்க துவாரகை வந்தார்கள்; வணங்கினார்கள்; 'கிருஷ்ணா, கோவிந்தா,
இன்னல் செய்தவர்களையெல்லாம் இல்லாது செய்தவனே,
மக்கள் துயர் தீர்த்த மாதவா, வையம் விட்டு வைகுந்தம் வா;
எங்களோடு வர வேண்டும் தேவ லோகம், எங்கட்கும் வேண்டும் உங்களோடு இருக்கும் யோகம்;'என்றனர்; 'யாவரையும் படைக்கும் பிரம்மா தேவா, யாதவர்களின் அழிவு  ஆரம்பமாகிவிட்டது, அறியாயா ?  ஆணவத்தால் அழியப் போகின்றனர் யாதவர்கள்;

அவர்கள் அழிந்தபின் அடியேன் வருவேன் மேலோகம், அதுவரை இருப்பேன் பூலோகம்' என்றுரைத்தான்; பிரம்மனையும்  மற்றவர்களையும் அனுப்பி வைத்தான்;

கண்ணன் பேசுவதைக் கேட்ட உத்தமர் கலவரமடைந்தார்;
கண் கலங்கினார்;செய்வதென்னவென்று தெரியாது திகைத்து நின்றார்;

துவாரகா நகரத்தில் கெட்ட சகுனங்கள் பல நிகழ்ந்தது;
அது ஊர்ப் பெரியவர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது;
கிருஷ்ணனிடம் சென்றனர்;
தமக்கு வழி காட்ட வினவினர்;

'நல்லோர் சாபம் நமை வாட்டுகிறது;
துவாரகை விட்டுச்செல்வோம், பிரபாச தீர்த்தம் நோக்கிச்செல்வோம்;
அவ்வாறு சென்றால் உயிர் பிழைப்போம்;
அன்னதானம் செய்வோம்;
நல்ல வழியில் வாழ்வோம்;
நாம் பெற்ற சாபத்தால் வரும் சங்கடத்தைத் தடுக்க அதுவே வழியாகும்;'

பரந்தாமன் உரைத்தான்;
அவன் சொல்லுக்குப் பணிந்து மக்கள் புறப்பட்டனர் பிரபாச தீர்த்தம் நோக்கி;
வருங்காலத்தில் விழையப்போகும்இன்னல்களை மனதில் தேக்கி;


பகவான் பேசுவதை எல்லாம் பொறுமையுடன் கேட்டார் உத்தவர்;
பின் பேசினார்;
'பரந்தாமா, தேவாதி தேவா,எல்லோரின் இன்னல்களையும் தீர்க்கும்
எசொதை மைந்தா,தங்களைப் பிரிந்து எப்படி இருப்பேன் நான் ?
தங்களோடு வைகுண்டம் வரவேணும் நான்,இதற்கு அருள் புரிய வேண்டும் நீர்;'


உத்தவரின் தூய உள்ளத்தையும் அதில் விளைந்த எண்ணத்தையும் கேட்ட கிருஷ்ணன் பின்வருமாறு உரைத்தான்;

'உத்தவரே, உத்தமரே,உயர்ந்தவரே, நாளை நடக்கப்போதை நானுமக்குசொல்கிறேன்; கேளும்;

பிரம்மன் கேட்டுக்கொண்ட பணிகலெல்லாம் பழுதேதுமின்றி நிறைவேற்றிவிட்டேன்;
பெற்ற சாபத்தால்  யாதவ குலம் தன்னோடே சண்டையிட்டு அழிந்துபோகும்;
இன்றிலிருந்து ஏழாவது நாள் இந்த நிலத்தை நீர் விழுங்கும்;
என்று நான் இவ்வுலகத்தை விட்டுச் செல்கிறேனோ,
அன்று முதல் இவ்வுலகத்தை கலிபுருடன் பிடித்துக்கொள்வான்;
இவ்வுலகம் மங்களம் இழந்து மாசுபட்டுப் போகும்;
மக்கள் மாக்கள் ஆவார்கள்;அதர்மத்தையேச் செய்வார்கள்;'

இதனைத் தொடர்ந்து
இன்னும் சொன்னான் கிருஷ்ணன்;
அவை ...

                                                                        ( கீதை தொடரும் )