Farewell message of Lord Krishna :
பாரதயுத்தம் முடிந்து, கிருஷ்ணரும் மறைந்து விட்டதாகவும் தெரிந்து மிக துக்கமடைந்தார். கிருஷ்ணர் மறையும் தருவாயில் ‘உத்தவருக்கு’ கடைசியாக நல்லுபதேசங்களை அளித்ததாகக் கேள்விப்பட்டு (essential Farewell message of Lord Krishna to Uddhava), உத்தவரை அணுகி, அவருக்கு கிருஷ்ணர் சொன்ன அறிவுரைகளை தனக்கும் உபதேசிக்கக் கேட்டுக்கொண்டார். இது மிக உபயோகமான நல்லுரைகள் அடங்கியது. இதை பகவத் கீதைக்கு அடுத்த படி நிலை என மதிக்கப்பட்டு மிக உயர்தரமான, சுருக்கச் சொல்லிய அறிவுரைகள் நிறம்பப் பெற்றது. இதை உத்தவ கீதை என்றும் கூறுவர்.
உத்தவ கீதை என்றால் என்ன என்பதை இப்போது பார்க்கலாம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவருடைய பக்தரும், ஒரு வகையில் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சகோதருமான உத்தவருக்கு போதித்த "கீதை" இந்த "உத்தவ கீதை". உத்தவ கீதை உபதேசிக்கப்பட்ட காலம் இந்த பூவுலகில் ஸ்ரீ கிருஷ்ணனின் அவதார நோக்கம் முடிந்து வைகுந்தம் திரும்புகின்ற காலகட்டம். ரிஷிகளின் சாபத்தின் பலனாக பூவுலகில் யாதவ இனம் அழிகின்ற நிலையை எட்டுகிறது. அப்போதுதான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அதீத பக்தி கொண்டவரான உத்தவர் வரப்போகும் ஆபத்தை உணர்ந்து சில உபதேசங்களைச் செய்யுமாறு வேண்ட ஸ்ரீ கிருஷ்ணர் அருளிச் செய்த உபதேசங்களே இந்த உத்தவ கீதையாகும்.
இந்த கீதை ஸ்ரீமத் பாகவதத்தில் 11ஆவது ஸ்காந்தமாக இருக்கிறது. இதை ஹம்ச கீதா என்றும் சொல்வார்கள். பகவத் கீதையை "Song of the God" என்பார்கள். வேதாந்தக் கருத்துக்களை உள்ளடக்கியது.
இந்த உத்தவ கீதையில் ஆன்மீக சிந்தனைகள், மதக்கோட்பாடுகள், பல தரப்பினருக்கும் உரிய நடத்தை விதிமுறைகள், வாழ்வின் நோக்கம், பக்தி ஈடுபாட்டின் அவசியம், உண்மைகளை உணரும் வழிமுறைகள், நமக்கு ஏற்படும் தீமைகளுக்கான காரணங்கள் இவை பற்றியெல்லாம் சிந்திக்கச் செய்யும் விவாதங்கள் இதில் உண்டு. பிறப்பால் க்ஷத்திரியனான ஸ்ரீ கிருஷ்ணன் யாதவ குலத்தில் வளர்ந்து யாதவனாக உணரப்பட்டு அந்த இனம் அழியும் தருணத்தில் சொல்லப்பட்ட தத்துவ விசாரங்களைக் கொண்டது இது.
தொடர்கிறது.........
Thank all site...
Thanks & Regards
Harimanikandan .V
ஹரிமணிகண்டன்
Be Good & Do Good
பகவத் கீதை(Gita)in tamil mp3 free download
ReplyDelete