Tuesday, November 19, 2013

உத்தவ கீதை - 2

உத்தவ கீதை - 2


'உத்தவரே, உறவு மக்கள் என எதன்மீதும் பாசம் கொள்ளாது, என்னையே எந்நேரமும் தியானத்தில் கொள்ளவும்; என்னைத் தவிர எல்லாம் மாயை  என்பதை உணரவும்;

மனதை அடக்கு, இந்த உலகமே நான், இதை அறி; தொல்லை இல்லை உமக்கு';


'பரந்தாமா, எல்லாவற்றையும் படைத்தவனே நீ தான்; எதன்மீதும்  பற்று கொள்ளாது துறந்திருக்கப் பறைபவனும் நீ தான்; அப்படிப் பற்று கொள்ளாதிருப்பது எப்படி என்று உபதேசிக்க வேண்டும்,எந்த தோசமும் இல்லாதவரே,காலத்தால் அளவிடமுடியாதவரே,
எல்லாம் அறிந்தவரே,என்றும் அழியாது நிலைத்திருக்கும் வைகுண்டத்தில் வசிப்பவரே, நர
நாராயணராக அவதரித்தவரே,உம்மைச் சரணடைந்தேன்;எம்மைக் கரையேற்றும்;'



உலகளந்தவன் உத்தவருக்கு விளக்கினான் யது என்ற அரசனுக்கும், அவதூதர் என்பவருக்கும் 
இடையே நடந்த வரலாற்றை;



அந்த வரலாறு ...


ஒருமுறை அரசன் யது ஆத்மா ஞானம் வேண்டி அவதூதரை  அணுகினான்;'அவதூதரே, எல்லாம் அறிந்தும் ஏதும் தெரியாச் சிறுவன் போல் இருக்கிறீரே, அழகிய சரீரம் கொண்டவர்,
அழகாகப் பேசுகிறவர், இருந்தும் எதன் மீது பற்றிலாது  இருக்கிறீரே,அறிவிருந்தும் பைத்தியம் போல் திறிகிரீரே;

காமம் பேராசை போன்றவைகளால் மக்கள் துன்புற, நீர் மட்டும் கங்கையில் குளிக்கும் யானை போல் சஞ்சலமன்றி  இருக்கிறீரே,இத்தனை ஞானம் கிடைத்தததெப்படி உமக்கு, அதை
இயம்ப வேண்டும் எமக்கு;'



அவதூதர் அவருக்கு அறிவுறுத்தியது ...

'அரசே, அநேக பேர்கள் எனக்குக 24 குருவாகி ஆத்மா ஞானம் கற்பித்தார்கள்; 
அவர்களிடம் கற்ற ஞானத்தை அரசர் தங்களுக்கு அடியேன் கற்பிக்கிறேன்;


அவர்கள் முறையே:
  1. பூமி
  2. காற்று
  3. ஆகாயம்
  4. நீர்
  5. அக்கினி (நெருப்பு)
  6. சந்திரன்
  7. சூரியன்
  8. மாடப்புறா
  9.  மலைப்பாம்பு,
  10. சமுத்திரம்,
  11. விட்டில் பூச்சி,
  12. தேனீ,
  13. யானை,
  14. தேனெடுப்பவன்,
  15. மான்
  16. மீன்,
  17. பிங்களையெனும் வேசி,
  18. புறா
  19. குழந்தை
  20. குமரி, 
  21. அம்பு தொடுப்பவன், 
  22. பாம்பு,
  23.  சிலந்திப்பூச்சி
  24. குளவி.

மனிதம் மிருகம் எல்லோராலும் மிதிபடுகிறது;
தோண்டத் தோண்டத் துன்பம்சகித்துக் கொள்கிறது;
மற்றவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் தருகிறது இந்த
மண் என்ற பூமி

இதுவே எனது முதல் குரு; மக்கள் வருத்தியதை மண்மாதா மறக்கிறாள்;
மாறாக நெல் கனி பல தருகிறாள்; துன்பம் தருவோருக்கு
இன்பம் தரவேண்டுமென்பது இப்பூமியிடமிருந்து நான் கற்ற பாடம்;
உபத்திரவம் செய்வோர்க்கும் உபயோகமாய் இருப்பதே இதன்
உள்ளர்த்தம்;

வாயு, உடலென்ற நாம் வாழ உறுதுணையாயிருக்கிறது; 
உடல் இன்ப துன்பத்தில் சிக்குண்டாலும், பணம் பொருள் மேல்
பற்றுகொண்டாலும் வாயு என்ற ஆத்மா இதிலெல்லாம் அகப்படாமல் 
தனித்திருக்கிறது;  அதுபோல் ஞானம் வேண்டுபவன் தேவையில்லாத பொருட்கள் மேல் 
சிந்தை கொள்ளது தனித்திருக்கவேண்டுமேன்பது வாயு எனக்கு வழங்கியப் பாடம்.

ஆகாயம் எங்கும் நிறைந்துள்ளது;அளவிட முடியாதது;
எதனோடும் எள்ளளவும் தொடர்பு இல்லாதது;
அதுபோல் ஆன்மாவும் தனித்து ஒரே நிலையில் இருக்கவேண்டுமேன்மது 
ஆகாயம் எனக்கு அறிவித்த பாடம்.

தண்ணீர் 
தனக்கென்று ஓர் நிறமற்றது;தன்னை நாடி வந்தோர்க்கு 
தன்னலம் பாராது நலம் செய்வது போல்,ஆத்மா ஞானியர் 
அண்டுவோர் பாவங்களைப் போக்க வல்லவர்;
இதனை எனக்கு உணர்த்திய தண்ணீரும் எனக்கு ஒரு குரு;

அக்னி, தன்னை அண்டியோரையெல்லாம் எரித்துச் சாம்பலாக்கும்;
அதனதன் வடிவேடுத்தே அக்னி அவைகளைக் கரிக்கும்;
அதுபோல் ஆன்மாவும் ஆக்கையின் வடிவமே கொள்கிறது;
அவரவர் எண்ணம் போல் வளர்ந்து  அந்தியில் அழிக்கிறது;
அக்னி எனக்கு அளித்த பாடமிது;

சந்திரன் 
சில காலம் வளர்கிறது,சில காலம் தேய்கிறது,இது நிலவு காரணமில்லாமல் நிகழும் மாற்றம்;
சூரியஒளி படும்அளவே கொண்டே அந்த நிலவின் தோற்றம்;
அதுபோல் ஒளிர்வது, மறைவதெல்லாம் ஆக்கையின் குணங்களே அன்றி ஆன்மாவிற்கும் அதற்கும் சம்பந்தமில்லை இது நிலவு எனக்குசொல்லித் தந்தப் பாடம்;

சூரியன் 
நீரைச் சுட்டு மேகமாய் மாற்றுகிறது;
பின் அதைக் குளிர்வித்து மழையாய்ப் பெய்கிறது;
அதுபோல் ஞானியர் கல்வி கற்று, ஞானம் பெற்று மற்றவர்க்கு மழை போல் வழங்க வேண்டும்;
சூரியன் எனக்குச்சொல்லித் தந்தது;

பந்த பாசத்தில் ஒட்டாது பழகி விலக வேண்டுமென்பது,
பந்த பாசத்தால் ஒட்டி உறவாடி உயிரிழந்த புறா ஒன்று எனக்கு
உணர்த்தியப் பாடம்;

உணவு தேடித் தான் செல்லாது, கிட்டிய உணவை உண்டு வாழும் 
மலைப் பாம்பு; உணவு கிட்டாது போனால் உண்ணாது வாழும்;
அதுபோல் கிடைத்ததைக் கொண்டு, கிட்டாதது பின் செல்லாதிருக்கும் ஞானம்
மலைப் பாம்பு சொல்லித் தந்தது;

கடல்,
பரந்து விரிந்து உள்ளது; 
மழைக் காலத்தில் ஆறுகள் கலப்பதினால் அளவு நீள்வதில்லை;
வெயில்காலத்தில் ஆறுகள் காய்வதினால் அளவு குறைவதில்லை;
அதுபோல் ஞானியர் இன்பம் வருகையில் துள்ளாது,
துன்பம் வருகையில் துயலாது, இருக்கவேண்டுமென்பது
கடல் தந்த பாடம்.

இன்னும் சொன்னது ... http://uddhavagitatamil.blogspot.in/2013/11/3.html





                                                                        ( உத்தவகீதை தொடரும் )

Thanks & Regards

Harimanikandan .V
ஹரிமணிகண்டன்

                 
ஓம் சிவசிவ ஓம்
Dr.Mystic Selvam Om Shiva Shiva Om Mp3                  
Be Good & Do Good

No comments:

Post a Comment